மேஷம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
உள்ளத்தில் அமைதி கூடும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டை அழகாக வைத்திருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும்.
மிதுனம்
வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பு உண்டு. வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கடகம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்யத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். சுபவிரயம் உண்டு.
சிம்மம்
லாபம் இருமடங்காகும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உல்லாசப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
ஆனந்த வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை அணிவதில் நாட்டம் செல்லும்.
துலாம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். மற்றவர்கள் வாங்கியப் பொருளைப் பார்த்து நீங்களும் வாங்க ஆசைப்படுவீர்கள்.
விருச்சகம்
நினைத்தது நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
தனுசு
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். பயணத்தால் சோர்வு, சோம்பல் ஏற்படலாம். குடும்பச் சுமை கூடும். கூடப்பிறந்தவர்களின் ஆதரவு கூடும்.
மகரம்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். பயணம் பலன் தரும்.
கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அழகான பொருளன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.
மீனம்
வாழ்க்கைத் தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகலாம்.
0 Responses to இன்றைய ராசி பலன் 02-06-2014 | Raasi Palan 02-06-2014