Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகள் உணரவே, தமது பதவியேற்பு விழாவின் போது  சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நேற்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி, வெளியுறவுக் கொள்கைத் தொடர்பாக தாம் எடுத்த முதல் முடிவு இந்தியாவின் வலிமையை உலக நாடுகளுக்குப் பறை சாற்றியுள்ளது என்று கூறினார். இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகள் உணர்ந்துக் கொள்ளவே சார்க் நாடுகளின்  தலைவர்களுக்கு தமது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் மேலும் அவர் கூறினார்.

அதோடு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது சரியான நேரத்தில் சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் மோடி கூறியுள்ளார்.

0 Responses to இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகள் உணரவே சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு!:பிரதமர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com