Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை இலங்கை இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் துணைத் தூதுவர் நெவில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும்நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு பிரித்தானியாவின் இலண்டன் நகரில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்தது. இந்த நான்கு நாள் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் சிறப்புத் தூதரான ஹொலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் துணைத் தூதுவர் நெவில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை அங்கீகரிக்கும் நாடுகளை மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பிதழ் விடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை அங்கீகரிக்கும் நாடுகளுக்கே அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது

'நாங்கள் மாநாட்டில் பங்குபற்ற விரும்பினோம். ஆனால், பிரகடனத்தை அங்கீகரிக்காத நிலையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் துணைத் தூதர் நெவில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரகடனத்தை இலங்கை மட்டுமன்றி, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்கவில்லை என்று கூறிய அவர், இந்தப் பிரகடனத்தை இலங்கை ஏன் அங்கீகரிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அளிக்க மறுத்துவிட்டார்.

0 Responses to மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் ஐ.நா. பிரகடனத்தை இலங்கை ஏற்கவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com