Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் தகுதியையும் இந்திய காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.

இந்தியாவின் அரசியல் சட்டத்தின் படி, இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு, ஒரு கட்சி குறைந்த பட்சம் 55 ஆசனங்களை பெற வேண்டும்.

ஆனால் நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 ஆசனங்களை பெற்றிருந்தது.

இந்த நிலையில் 55 ஆசனங்களை எந்த ஒரு கட்சியும் பெறாத நிலையில், எதிர்வரும் ஐந்து வருடங்கள் இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இன்றி செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தது காங்கிரஸ் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com