Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதன் மூலம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கை தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராக பதவி வகித்தரும், சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு என்று குறிப்பிடப்படுவது, சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வில் அமைந்த தீர்வுத் திட்டமாகும். தொடர்ந்தும் 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் செல்வதா, இல்லையா என்று யோசித்துக் கொண்டிருப்பதைவிட சரியான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வினை நாம் முன்வைக்கும் போது, அதை இந்தியா ஆதரிக்கும். அப்போது இலங்கையின் பக்கம் இந்தியா இருந்து சர்வதேச அழுத்தங்களை இல்லாமற் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 26வது கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அதிகாரப் பரவலாக்கமே சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கையை விடுவிக்கும்: திஸ்ஸ விதாரண

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com