தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு யோசனைகளை முன்வைப்பதற்காக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது எமக்கு (தமிழ் மக்களுக்கு) பிரச்சினைகளைக் கொண்டு வரும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “எமது கட்சியின் (த.தே.கூ) கருத்தாக இல்லாமல் எனது சொந்தக் கருத்தாக பாராளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில் சிலவற்றை செல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சென்றால், அது எமக்கு நாமே பிரச்சனையை உருவாக்கி கொள்வதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இதுவரை காலமும் பல விதமான குழுக்கள் தமிழர்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியாக சந்திரிக்கா குமரதுங்க பதவி வகித்த காலத்தில் அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டது. அந்த வரைபை முன்வையுங்கள். திஸ்ஸ விதாரண குழு (சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு) ஒரு அறிக்கையை தந்துள்ளது. அதனையும் முன்வையுங்கள். இன்னும் வேறு வேறு அறிக்கைகள் இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக தரப்பட்டுள்ளன.
அவற்றையெல்லாம் முன்வைத்து, அதனை மையமாக - அடிப்படையாக கொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழு விவாதிப்பதாக இருந்தால் தமிழ் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன். ஏனென்றால், அடிப்படையை நிர்ணயித்து அதனை செயற்படுத்தாது விட்டோமானால், அங்கு நாம் செல்வதால் எந்தவிதமான பலனும் கிடையாது. இருப்பதையும் நாம் இழந்து வரும் கட்டம் ஏற்படக்கூடும்” என்றுள்ளார்.

0 Responses to பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது பிரச்சினைகளை கொண்டுவரும்: சி.வி.விக்னேஸ்வரன்