இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும், மோதல்களினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் மாறவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. அதில், உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் மோதல் காலத்திலும், அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதலையும், அதன் மூலம் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையினால் அதிகாரமளிக்கப்பட்டு, முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு எமது அலுவலகம் நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினருக்கு பல நிபுணர்களும், அதிகாரமளிக்கப்பட்டவர்களும் உதவி வழங்குவதற்கு தயாராக உள்ளதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
நம்பகமான உண்மையினை கண்டறியும் செய்முறையுடன் ஒத்துழைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதால் தான் முகங்கொடுத்த விமர்சனங்களை பற்றி தனது உரையில் குறிப்பிட்ட நவநீதம்பிள்ளை, பூகோள விழுமியங்களின் கொள்ளை ரீதியான அமைப்பை பாதுகாப்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கிய நன்மை உண்டாகும் என்றுள்ளார்.
மனித உரிமை மீறல்கள், நாடுகளின் குழப்ப நிலைக்கும் மோதல்களுக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக உள்ளது. எனவே ஒவ்வொரு நாடுகளும் மனித உரிமையினை பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தால் அதற்கு நன்மை உண்டாகும். இருப்பினும் எனது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் இழுத்தடிப்புகளாலும் மறுப்புக்களாலும் எதிர்கொள்ளப்பட்டன. இது நாம் அரசாங்கங்களை விமர்சித்ததால் உண்டானதா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆம், இதுவே மனித உரிமைகளை பரப்புரை செய்வதன் இயல்பு. அதிகார வர்க்கத்தினரிடம் உண்மையை கூறுவது சிலருக்குள்ள சிறப்புரிமைகள் என்பன மனித கௌரவத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும். சில அரசுகள் பேச விரும்பாத விடயங்களை நாம் கவனத்தில் எடுப்பது இதற்கு காரணமா? ஒரு நாட்டில் இது கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு உபாயமாக இருக்கலாம். இன்னொரு நாட்டில் இது சிறுபான்மையினர் அல்லது வந்தேறு குடிகளின் மீதான மனிதாபிமானமற்ற செயற்பாடாக இருக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளராக கடந்த ஆறு வருடங்களாக செயற்பட்ட நவநீதம்பிள்ளை எதிர்வரும் மாதத்துடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். அவர், கலந்து கொள்ளும் இறுதி மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் இது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இலங்கையில் மோதல்களினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மாறவில்லை: நவிபிள்ளை