மன்னார் மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் ஆறு இராணுவ முகாம்கள் இருக்கின்ற போதும் ஒரு காவல்நிலையம் கூட இல்லாதுள்ளது. இதன் மூலம் வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்பது துல்லியமாக வெளிப்படுவதாக வன்னி மாவட்ட கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மாந்தை கிழக்கிலுள்ள கிராமங்களில் சுமார் 3000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் பொலிஸ் சான்றிதழ் மற்றும் குறைபாடுகளை மேற்கொள்ள 15 கிலோ மீற்றர் பயணம் செய்து மல்லாவி பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபைக்கான பொலிஸ் அதிகாரம் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற நிலையினில் படையினரது பிரசன்னம் மற்றும் பொலிஸாரது பிரசன்னம் பற்றி அவர் இவ்வாறு பிரஸ்தாபித்துள்ளார்.
0 Responses to மாந்தை கிழக்கினில் ஆறு படைமுகாம்கள்! காவல் நிலையமில்லையென்கிறார் செல்வம்!!