Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் ஜனனி ஜனநாயகத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்த பின்னர் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக தமிழர்கள் சார்பில் போட்டியிட்டவர் ஜனனி. அபோது நடந்த பாரிய பேரவலம் காரணமாக மக்கள் இவருக்கு பாரிய அளவில், வாக்களித்தார்கள்.  சுமார் 52,000 ஆயிரம் வாக்குகளை இவர்பெற்றார். ஆனால் வெற்றியடையவில்லை. இருப்பினும் அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு வந்தார். தமிழர்களுக்காக போராடுவதாக கூறிவந்த இவர் இன அழிப்புக்கான அமைப்பு(TஆG) என்று ஒன்றை ஆரம்பித்து இருந்தார்.

ஜனனி ஜனநாயகம் உருவாக்கிய இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் சட்டத்துறை மற்றும் வழக்கு மேலாளராக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பவர் ஹென்றிதா பிரிஸ்கோய் என்பவர் ஆவார். இவர் பிரித்தானிய இராணுவ அதிகாரியாக வேலை பார்த்தவர். அதுவும் பிரித்தானிய இராணுவத்தின் உளவுப்பிரிவில் வேலைசெய்தவர். அதற்கு முன்பதாக சுனாமிக் காலத்தில் இலங்கையில் தொண்டராக வேலைசெய்தவர் என்பது மிகவும் அதிர்சிதரும் தகவலாக உள்ளது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முந்தோன்றி வாளோடு வேலி பாய்ந்த மூத்த குடிகளான தமிழ் மக்களின் மத்தியில் ஒரு படித்தவரைப் பிடிக்கமுடியாமல் இலங்கையையும் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைப் போராட்டத்தையும் சிதைத்த உளவாளியையா வேலைக்குச் சேர்க்க வேண்டும்.

குறித்த இச்செய்தி வெளியாகிய நாளில் இருந்து பெரும் சர்சையில் ஜனனி சிக்கியுள்ளார். இவர் மிக விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுப்பது நல்லது.

ஆதாரம்:

https://www.linkedin.com/pub/henrietta-briscoe/80/845/57

0 Responses to சர்சையில் சிக்கியுள்ள ஜானனி ஜனநாயகத்தின் அமைப்பு (இன அழிப்புக்கு எதிரான அமைப்பு)!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com