மகிந்தராஜபக்சவின் மரணத்துக்கு பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளை தற்போதே மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையின் அரசியல் யாப்பின் படி, ஜனாதிபதி ஒருவர் மரணித்த பின்னர், அல்லது பதவியில் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்ற நிலையில், நாட்டில் உள்ள பிரதமர், தற்காலிக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
அதன் பின்னர் ஒரு மாத காலப்பகுதிக்குள் ஆளும் கட்சியில் இரகசிய வாக்கெடுப்பினை நடத்தி, புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச மரணித்துவிட்டால், அதற்கு பதவியில் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால், அவரது மகன் நாமல்ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமது குடும்பத்தார் அல்லாத வேறொருவர் பிரதமராக இருந்தால், நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வது நிச்சயமில்லை.
இந்த நிலையில் அந்த பதவிக்கு கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to மகிந்த ராஜபக்ச மரணித்தால் ஐனதிபதியாக கோட்டாபயாவை நியமிக்க நடவடிக்கை!