Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்த பயிலரங்கொன்று கும்பலொன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரையின் அடிப்படையில் புலனாய்வுச் செய்தியாக்கம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) நிறுவனத்தின் இலங்கைக் கிளை வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கை நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றில் நேற்று சனிக்கிழமை நடத்தியது. இதன்போதே, விடுதிக்கு வெளியில் கும்பலொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதனையடுத்தே பயிலரங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

பொலனறுவை மாவட்டத்தின் மின்னேரியா பகுதியிலுள்ள விடுதியொன்றில் குறித்த பயிலரங்கு நடைபெறவிருந்த நிலையில், அங்கும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுனால் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

நேற்றைய பயிரங்கு நடைபெற்ற விடுதிக்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பயிலரங்கை நடத்தியவர்கள் தேசத் துரோகிகள் என்று கூச்சலிட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் திடீரென உணர்ச்சி வசப்பட்ட ஒரு கூட்டத்தினரால் நடத்தப்படவில்லை. நன்கு திட்டமிட்ட வகையிலேயே நடத்தப்பட்டுள்ளது என்று பயிலரங்கில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘டிஜிட்டல் முறையில் அச்சுப் பதித்த பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் அவர்கள் தாங்கியிருந்தார்கள். அவற்றில் எங்களுடைய படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. இதனால், இந்த ஆர்ப்பாட்டம் முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர்களாலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பொலிஸார் எங்களிடம் கூறினார்கள்' என்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் ஷாண் விஜேதுங்க பி.பி.சி.யிடம் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட பயிலரங்கு கும்பலொன்றின் ஆர்ப்பாட்டத்தினால் நிறுத்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com