தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கையின் இறைமையை பாதிக்கும் வகையில் செயற்படுகின்றார் என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தமது அரசியல் வெற்றிக்காக ஜெயலலிதா ஜெயராம் நீண்ட காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார். அண்மையில் அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததாகவும், தனித் தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா பிரேரணை முன்வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இதனிடையே, மாநில அரசுகளின் ஆதரவு தேவைப்படாத தனிப்பலம் கொண்ட அரசாங்கம் ஒன்றை நரேந்திர மோடி அமைத்துள்ளார். இதனால் இலங்கை அரசியல் நிலையும் ஸ்திரம் அடைந்துள்ளது. ஜெயலலிதா ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் மத்திய அரசை அது எவ்விதத்திலும் பாதிக்காது. இது இலங்கைக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to ஜெயலலிதா இலங்கையின் இறைமைக்கு எதிராக செயற்படுகிறார்: கெஹலிய ரம்புக்வெல