Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய மத்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசாங்கத்துக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக தமிழக மீனவர்களை மையப்படுத்திய இராஜதந்திர சூழ்ச்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் சிறிலங்காவுக்கு ஆதரவான இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இந்த சூழ்ச்சிக்கு உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சீனா, மலேசியா போன்ற நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்திய மத்திய அரசாங்கம் தமிழத்தின் அழுத்தம் காரணமாகவே தமக்கு எதிராக நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. 

இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி விட்டால், தாம் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

0 Responses to இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசாங்கத்திற்கும் இடைவெளி ஏற்படுத்த இலங்கை இரகசிய நடவடிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com