Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் என்னை சந்தித்தால் வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க தயாராக இருக்கின்றேன். அவர், மனச்சாட்சிப் படி மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்று பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சந்திப்பதற்கு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் வாய்ப்புக்களை இன்னமும் வழங்கவில்லை.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பஷில் ராஜபக்ஷ, ‘வடக்கு மாகாண மக்கள் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கியுள்ள ஆணையை மதிக்க வேண்டும். இணைந்து செயற்படுவது தொடர்பில் அவருக்கு அனுபவமில்லை என்றால், நாங்கள் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அவர் தன்னுடைய அதிகாரத்துக்கு அப்பாலான விடயங்கள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு முதலமைச்சர் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும்: பஷில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com