தமிழ் மக்கள் தங்களது வாக்குரிமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்காளர் இடாப்புக்களைத் திருத்துவதற்குரிய விண்ணப்பப் படிவங்கள் தற்போது நாடு பூராவும் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பா.அரியநேத்திரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நிலையில் இருக்கக் கூடிய உரிமை வாக்குரிமை மட்டுமேயாகும். எனவே அதனை நாங்களாகவே இழந்து விடக் கூடாது. இதனை கவனத்தில் கொண்டு வாக்காளர் இடாப்புக்களை திருத்துவதற்குரிய விண்ணப்பப் படிவத்தினை ஒவ்வொரு குடும்பத்தினரும் பூர்த்தி செய்து தவறாமல் ஒப்படைத்தல் வேண்டும்.
புலம்பெயர்வு மற்றும் பொருளாதார வசதியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு என்பன ஈழத் தமிழர்களின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இவை நமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காரணங்களாகும்.
நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட வகையில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்து மீறிய குடியேற்றம் நில அபகரிப்பு என்பனவும் தமிழர்களின் விகிதாசாரத்தை வீழ்ச்சியடையச் செய்கின்றன. அதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை யாரும் மறுப்பதற்கில்லை.
தேர்தலின் போது கூட நம்மவர்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. சுமார் 70 வீதத்தினருக்கு மேல் வாக்களிப்பதில்லை. நூறு வீதமும் வாக்களிக்கப்பட்டிருக்குமேயானால் மேலும் தமிழர்கள் பலரை பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைகளுக்கும் உறுப்பினர்களாக தெரிவு செய்திருக்க முடியும்.
இவ்வாறான நிலையில் வாக்காளர் இடாப்புகளையும் நாம் சரியான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் நமது வாக்குரிமையையும் நாமே பறி கொடுத்தவர்களாவோம். எனவே வாக்காளர் இடாப்புகளை திருத்துவதற்குரிய படிவங்கள் ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நிரப்பி தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: பா.அரியநேத்திரன் கோரிக்கை!