பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டப் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இம்மாத இறுதியில் பூட்டான் செல்ல உள்ளார் நரேந்திர மோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
பூட்டான் பிரதமர், நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள டெல்லி வந்திருந்தபோது, தமது நாட்டுக்கு வரும்படி நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார் என்று கூறப்படுகிறது. எனவே இரு நாட்டு நல்லுறவு, அணுமின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க இந்த மாத இறுதியில் நரேந்திர மோடி பூட்டான் செல்லவுள்ளார் என்று பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூலை மாதத்தில் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரேசில் செல்லவுள்ளார் என்றும், செப்டெம்பர் மாதத்தில் வாஷிங்டன் செல்லவுள்ளார் என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் செல்கிறார் பிரதமர்!