ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது உறுதி என்று அறிவித்துள்ள அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, ஆனாலும், அதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்குமாறு கண்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் தேர்தலில் இன, மத வேறுபாடுகளை மறந்துவிட்டு தேசிய நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கிலேயே தமிழீழ விடுதலைப் புலிக்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்கு நாடுகளுக்கு ஒரு தலைவலியாகிவிட்டார். வேறு யாராவது ஜனாதிபதியாக இருந்தால் அவர் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு முறையல்ல நான்கு தடவை வளைந்து நின்றிருப்பார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தல் வரும் ஜனவரியில்; கெஹலிய ரம்புக்வெல அறிவிப்பு!