தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் பி.திகாம்பரம், அமைச்சுப் பதவியிருந்து இராஜினமாச் செய்துள்ளார்.
தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைநகல் மூலம் இன்று புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் நலன் தொடர்பில் இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மற்றும் மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு நிகரான சலுகைகள் தனது பிரதியமைச்சுக்கு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியே அவர் அமைச்சுப் பதவியிருந்து விலகியுள்ளார்.
இதனிடையே, பி.திகாம்பரம் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பார் என்று தெரிகிறது.

0 Responses to பிரதியமைச்சர் பி.திகாம்பரம் இராஜினாமா; பொது எதிரணியை ஆதரிக்க முடிவு?