Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா டுவிட்டரில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனை 'பிரோ' (bro) என அழைத்து டுவீட் செய்துள்ளார்.

ஆனால் விவகாரம் அமெரிக்காவின் நட்பு நாடான பிரிட்டனின் பிரதமரை இவர் பிரோ என அழைத்தது அல்ல! பதிலாக டேவிட் கமெரூன் என்ற அதே பெயருடைய கம்பியூட்டர் விளையாட்டுப் பிரியர் ஒருவரது கணக்கில் ஒபாமா தவறுதலாக பிரோ எனப் பதிவு செய்ததுதான்! தற்போது இவ்விவகாரம் ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

டுவிட்டரில் ஒபாமா 645 000 பேரைப் பின் தொடரும் அதேவேளை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனோ ஒபாமா உட்பட 382 பேரையே பின்பற்றி வருகின்றார். இந்நிலையில் ஒபாமாவின் டுவிட்டர் கணக்கைக் கொண்டு நடத்தும் 'Organizing For Action' என்ற அமைப்பு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனின் @david_cameron என்ற உத்தியோகபூர்வ சொந்த கணக்கைப் பின் தொடர்வதற்குப் பதிலாக @davidcameron எனப்படும் ஓரிகனில் வாழும் ஸ்டார் டிரெக் பற்றி டுவீட் செய்து வரும் நபரின் கணக்கைப் பின் தொடர்ந்ததால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டு விட்டதாகத் தற்போது விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் பிரதமர் கமெரூன் தனது மிகச் சிறந்த நண்பர் எனவும் முதன்மையான பங்காளி எனவும் ஒபாமா புகழ்ந்து இருந்தார். மேலும் தாம் இருவருமே இந்த உலகை ஒரே கண்ணோட்டத்திலேயே பார்வையிட்டு வருகின்றோம் என்றும் தெரிவித்திருந்தார். இதேவேளை பிரதமர் டேவிட் கமெரூன் சமூக வலைத் தளங்களில் மிக வெளிப்படையாகக் கருத்துக்கள் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to டுவிட்டரில் பிழையான டேவிட் கமெரூனின் கணக்கைப் பின் தொடர்ந்தார் ஒபாமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com