அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யும் முகமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுள்ள 19வது திருத்த சட்டமூலம் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 19வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறைமை மாற்றத்திற்கான திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக சமர்ப்பித்தால், இரண்டுக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவதாகவே அறிவித்திருந்தோம். ஆனாலும், தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்தினை அரசாங்கம் திட்டமிட்டு தவிர்த்திருக்கின்றது என்றும் நிமால் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 19வது திருத்த சட்டமூலத்தினை சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “குறிப்பாக 19வது திருத்தச் சட்டத்தில் அமைச்சரவைக்கு தலைமை தாங்குபவர் யார் என்பது பற்றிய விடயம் உட்பட சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்லாத முறையிலேயே இந்த அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த முரண்பாடுகள் காரணமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை எற்படலாம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to 19வது திருத்தம் முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றது: நிமல் சிறிபால டி சில்வா