Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மைத்திரி இன்று சீனா பயணம்!

பதிந்தவர்: தம்பியன் 25 March 2015

சீனாவுக்கான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளார். அத்தோடு, வர்த்தக ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதனிடையே, சீன அரசினால் இலங்கையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இருநாட்டின் தலைவர்களும் கூடிய கவனம் செலுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

0 Responses to மைத்திரி இன்று சீனா பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com