அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்த சட்டமூலத்தில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களின் அடிப்படையிலேயே மாற்றங்களைச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாமல் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்றே அறிவிக்கப்பட்டாலும், இச்சட்ட திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இச்சட்ட திருத்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என்று சட்டமா அதிபரும் தெரிவித்துள்ளார். எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியபோது, 19வது திருத்தச் சட்டமூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் 19வது திருத்தச் சட்டத்திலுள்ள முரண்பாடுகள் குறித்து பேசினர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பொறுத்தே 19வது திருத்தத்தில் திருத்தங்களை செய்யலாம்: ரணில்