இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யும் 19வது திருத்த சட்டமூலத்தினை சற்று முன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான அனுமதி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் 19வது திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டமூலத்திற்கான அமைச்சரவை ஒப்புதல் கடந்த 15ஆம் திகதி கிடைத்தது. அதனையடுத்தே, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
0 Responses to 19வது திருத்த சட்டமூலம் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!