Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2015ம் ஆண்டுக்கான இந்திய அழகியாக டெல்லியைச் சேர்ந்த அதிதி ஆர்யா என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இறுதிப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட 21 அழகிகளுக்கு இடையிலான போட்டி மும்பை ய்ஷ்ராஜ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நடுவர்களாக பாலிவூட் நடிகர்கள் ஜான் ஆப்ரஹாம், அனில் கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே, அபுஜானி, சந்தீப் கோஸ்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிதி ஆர்யா டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி பகுப்பாளராக பணிபுரிகிறார். அவரது லுக்கை விட, அவரது பண்புகளை வைத்தே இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஜோன் ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.

அடுத்து உலக அழகிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் அதிதி ஆர்யாவே பரிந்துரைக்கப்படவுள்ளார்.

0 Responses to 2015ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியாவாக டெல்லியின் அதிதி ஆர்யா தெரிவு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com