Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நாட்டுக்குள் வந்ததும் கைது செய்யுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடு சென்றுள்ள பஷில் ராஜபக்ஷவை நாட்டுக்கு வந்ததும் கைது செய்ய வேண்டாம் என்று நிதி மோசடிப் பிரிவுக்கு உத்தரவிடக் கோரும் மனுவொன்றை பஷில் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றத்தில் முன்வைத்தனர். ஆனால், அதனை நிராகரித்த நீதவான், பஷில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பஷில் ராஜபக்ஷ மீது திவிநெகும திணைக்களத்தில் நடைபெற்றதாக கூறப்படும் பாரிய நிதிமோசடி மற்றும் 2006ஆம் ஆண்டில் மிக் விமான கொள்வனவு, உள்ளிட்ட நிதிமோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பஷில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள், பஷில் ராஜபக்ஷ மருத்துவ தேவைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும், அவர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to பஷில் ராஜபக்ஷ நாட்டுக்குள் வந்ததும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com