Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிலக்கரி சுரங்க ஏல முறைகேடுத் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளார்.இவருக்கு ஆதரவாக கபில்சிபல் வாதாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதில், அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்தது. இதை அடுத்து புகார் பதிவு செய்யப்பட்டு, புகாரை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த ஏல முறைகேடு நடைப்பெற்றப்போது அப்போதைய நிலக்கரித் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்.

ஒரிசாவில் உள்ள ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சுரங்கங்களை ஏலம் விட்ட முறைகேடில் மன்மோகன் சிங்குக்கும் தொடர்பு உள்ளது என்கிற ரீதியில், மன்மோகன் சிங், ஹிண்டால்கோ நிறுவன உரிமையாளர், அப்போது மன்மோகன் சிங் அலுவலகத்தில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் என்று அனைவரும் சிபிஐ நீதிமனத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நேற்று முன்தினம் சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும், இதை நீதிமன்றத்தின் மூலம் அணுக உள்ளதாக தெரிவித்துள்ள மன்மோகன் சிங், இதுத் தொடர்பாக நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.இவர் மனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில் காங்கிரசின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான வழக்கறிஞரும் முன்னாள் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான கபில்சிபல் வழக்கில் ஆஜராகி வாதாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மன்மோகன் சிங் நாளை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்:வழக்கறிஞர் கபில்சிபல்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com