கொல்கத்தா அருகே கிறிஸ்துவ பள்ளி ஒன்றில் 71 கன்னியாஸ்திரி ஒருவர் கும்பல் ஒன்றால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் ரணகாட்டில் உள்ள கிறிஸ்துவ பள்ளி ஒன்றில் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் உட்புகுந்த 12 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று அங்கு இருந்த 3 கன்னியாஸ்திரிகளை கட்டிப்போட்டு 12 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
பள்ளியின் வழிபாட்டு மேடையை அடித்து உடைக்க முற்பட்ட போது அக்கும்பலை தடுக்க முயன்ற 71 வயது கன்னியாஸ்திரிகையே இவ்வாறு கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
கிறிஸ்துவ அமைப்புக்கள் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிக மோசமானது என கிரிஸ்துவ பேராயர்களின் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரின் முகம் கிறிஸ்துவ பள்ளியின் சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த பள்ளியில் தடைவியல் நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பொலிஸார் விசாரணையை முடக்கியுள்ளனர். இதேவேளை இச்சம்பவத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்.ஐக்கும் தொடர்பிருப்பதாக மேற்கு வங்க அரசும், குறித்த கிறிஸ்துவ அமைப்புக்களும் குற்றம் சுமத்தியுள்ளன. ஏற்கனவே பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் இது போன்ற கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கொல்கத்தாவில் கிறிஸ்துவ பள்ளியில் கொள்ளை, கன்னியாஸ்திரி மீது பலாத்காரம்!