பாராளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலை வருமானால், அதனை ஏற்பது தொடர்பில் பரிசீலிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் நிமல் சிறிபால டி சில்வா பதவியிழக்கும் நிலை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கட்சி முன்னிலை வகிக்கின்றது. இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாக்கூடாது என்று சில கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாம் நாடவும் இல்லை அந்தப் பதவி வேறொரு கட்சியில் உள்ளவருக்குச் சென்றடையக்கூடாது என்று நாம் எண்ணவும் இல்லை. வேறொரு கட்சியில் உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றால் அதனை நாம் எதிர்க்கவும் மாட்டோம். ஆனால், பாராளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என்று எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது கூட்டுக் கருத்துகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. பாராளுமன்றத்துக்கென விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளே எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தனிப்பட்டவர்களின் கருத்துகள் செல்லுபடியற்றதாகும்.” என்றுள்ளார்.

0 Responses to பாராளுமன்ற விதிமுறைகளின்படி த.தே.கூ.வுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்றால் பரிசீலிப்போம்: சம்பந்தன்