Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2015ம் ஆண்டுக்கான உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி கொண்டது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக உலக கோப்பையை வென்ற அணியாக புதிய சாதனை படைத்திருக்கிறது.

 இன்று மெல்போர்ன் மைதானத்தில், 90,000 பேர் திரண்டிருந்த இப்போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 183 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மெக்குலம் எந்தவித ஓட்டமும் பெறாது ஆட்டமிழந்தார். ரோஸ் டெய்லர் 40 ஓட்டங்களையும் கிராண்ட் எலியொட் 83 ஓட்டங்களையும் எடுத்தனர். கொரேய் ஆண்டர்சன், லுக் ரோஞ்சி, ஆகியோரும் டக்கில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பௌக்னர் தலா 3 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சார்பில் ஃபிஞ்ச் எந்தவித ஓட்டமும் பெறாது ஆட்டமிழந்த போதும், டாவிட் வார்னர் 45 ஓட்டங்களை எடுத்தார். தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிப் போட்டியில் விளையாடும் மைக்கெல் கிளார்க் 74 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 56 ஓட்டங்களையும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக இக்கட்டான நிலையில் பந்துவீசி மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜேம்ஸ் பௌக்னரும், தொடர் நாயகனாக ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரும், உலகின் அதி வேக பந்துவீச்சாளராக தற்போது திகழும் மிட்செல் ஸ்டார்க்கும் தெரிவானார்கள்.

0 Responses to ஐந்தாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com