பாரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை விசாரிப்பதற்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான உத்தரவினை நீதிமன்றம் விடுக்க வேண்டும் என்று பொலிஸார் கோரியுள்ளனர்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பஷில் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு (11ஆம் திகதி) புறப்பட்டுச் சென்றார். அத்துடன் பாராளுமன்ற அமர்வுகளில் மூன்று மாதங்களுக்கு பங்குபற்றாமல் இருப்பதற்கான விடுமுறையையும் பாராளுமன்றம் அவருக்கு வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to நிதி மோசடிக் குற்றச்சாட்டு: பஷில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைத்துவர நீதிமன்றத்தை நாடியுள்ளது பொலிஸ்!