Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விரும்புவாக்கு மற்றும் தொகுதிவாரி முறைகளை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்த்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளரை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் அலரி மாளிகையில் கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டுவருவது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்றும் நடைபெற்றிருந்தது.

உத்தேச புதிய தேர்தல் முறைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படவிருப்பதாகவும், இதில் 140 பேர் விருப்புவாக்குகளின் படியும், 80 பேர் தொகுதிவாரி முறையின் கீழ் மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவிருப்பதுடன், 30 தேசிய பட்டியல் ஆசனங்களும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான உறுதியான இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் புதிய தேர்தல் முறை குறித்து இன்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர், கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

0 Responses to புதிய தேர்தல் முறை: பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்கிறது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com