Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடகாவின் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே மொத்தம் 4 தடுப்பணைகள் கட்ட நிபுணர் குழு அறிக்கை கர்நாடக அரசிடம் தாக்கலாகி உள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, அம்மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைக் கட்ட முடிவு செய்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியை வேண்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு தடுப்பணைக் கட்டினால் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைந்து விடும் என்று தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தொடுக்கப்பட்டு உள்ளது. மனுவில் கர்நாடக அரசின் முடிவுக்குத் தடை விதிக்க கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், கர்நாடக அரசு அணைக் கடும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. முதற்கட்டமாக அணைக் கட்ட 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ள நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 4 தடுப்பணைகள் கட்ட நிபுணர்கள் குழு, கர்நாடக அரசிடம் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், மொத்தம் 80 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் அணைக்கட்ட வேண்டும் என்றும், ஒரே அணையாகக் கட்டினால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளள நிபுணர் குழு. ஒரு பெரிய அணை 3 சிறிய அணைகள் கட்ட வேண்டும் என்றும், பெரிய அணையில் 40 டிஎம்சி தண்ணீரை சேகரித்து அதில் மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது நிபுணர் குழு என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to கர்நாடகாவின் மேகதாதுவில் 4 தடுப்பணைகள்: நிபுணர் குழு அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com