Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையின் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களும் உள்ளடங்கியுள்ளதால் நாம் பலமாக இருந்தாலே விசாரணைகளை மேலும் விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மக்களின் வாக்கு பலம் அதிகம் எமக்குத் தேவை. தமிழரின் கொள்கைகள், இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த பாராளுமன்றத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த சர்வதேசத்திடம் வேண்டுகோள்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com