சிரியா துருக்கி எல்லையிலுள்ள சுரக் நகரில் நேற்று திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் நிகழ்த்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
குறித்த தற்கொலைத் தாக்குதல் அப்பகுதியில் இருந்த அமாரா என்ற கலாச்சார மையைத்தின் பூங்காவுக்குள் நிகழ்த்தப் பட்டதாகவும் இதன் பின்னணியில் ISIS போராளிகள் இருந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களில் துருக்கி மீது மேற்கொள்ளப் பட்ட மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும். மேலும் இதனால் கொதிப்படைந்த துருக்கியர்கள் திங்கட்கிழமை மாலை தலைநகர் இஸ்தான்புல்லில் ஆயிரக் கணக்கில் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறாதிருப்பதற்காக துருக்கிப் போலிசார் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் தண்ணீரையும் பீய்ச்சி அடித்து அவர்களைக் களைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுரக் நகரத்தின் அமாரா மையத்தில் தாக்குதல் நடத்தப் பட்ட போது அங்கு சுமார் 300 பேர் வரை ஒன்று கூடி சிரிய குர்து நகரமான கொபானியை மீளக் கட்டியமைப்பது தொடர்பில் விவாதித்துக் கொண்டிருந்ததாக ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அண்மையில் ISIS போராளிகளிடம் இருந்து சிரிய மற்றும் குர்துப் படைகள் கொபானியைக் கைப்பற்றி இருந்தனர். இதற்குப் பழி வாங்கும் முகமாகவும் நேற்றைய தற்கொலைத் தாக்குதல் ISIS ஆல் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் எனவும் கருதப் படுகின்றது. சிரிய துருக்கி எல்லையில் இருந்தும் கொபானி நகரில் இருந்தும் சுரக் நகர் 6 மைல் தொலைவின் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to துருக்கி எல்லையில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்!: இஸ்தான்புல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்