Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் மோசடி மூலம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களை தான் எடுத்துக் கொண்டிருப்பதாக யாராகினும் நிரூபித்தால், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹொரனையில் கடந்த நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “நாம் அளித்துள்ள வாக்குறுதிகள் சகலவற்றையும் நிறைவேற்றுவதற்கு எம்மிடம் நிதி இருக்கின்றது. நிதியை திரட்டு விதம் எங்களுக்கு தெரியும். வெட்கம் கெட்ட மனிதர்கள் என்னுடய வங்கிக்கணக்கில் 18 மில்லியன் அமெரிக்க டொலர் இருப்பதாக கூறுகின்றனர். எனது கணக்கில் ஒரு டொலரேனும் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் என் கழுத்தை நானே அறுத்துக்கொள்வேன்.” என்றுள்ளார்.

0 Responses to 18 மில்லியன் டொலர்கள் என்னிடம் இருப்பதாக நிரூபித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com