Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு பிளவுபடாத சுயாட்சி ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிலர் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவது கவலைக்குரிய விடயமென்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன் தொடர்பாகவே தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளது. இதில் அரசியல் தீர்வு நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளோம். காணி, இராணுவ மயமாக்கல், விதவைகள், குழந்தைகள் போராளிகள், மறியலில் உள்ளோர், காணாமல் போனோர், தொழில்வாய்ப்பு மீள்குடி யேற்றம், புனர்வாழ்வு போன்றவை தொடர்பான பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் எமது விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எமது மக்களை இந்த நாட்டிலிருந்து விரட்டி அடித்து கலைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிய ஜனாதிபதி தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனவே எமது பிரச்சினைகள் இனி தீரலாம். சர்வதேச சமூகம் எமக்கு ஆதரவளிக்கும். ஏனெனில் நாங்கள் நியாயமான தீர்வுத் திட்டத்தினையே முன்வைப்போம்.

அதுதான் ஒருமித்த இந்த நாட்டுக்குள் எவ்விதமான பிளவுகளும் ஏற்படாமல் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்கள் பல்வேறு மதங்கள், பல்வேறு மக்கள் வாழ்கின்ற இடங்களில் எந்தவிதமான ஆட்சியினை பெற்று அந்தந்த மக்கள் தாங்கள், தாங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் எந்தவிதமான சுயாட்சியை பெற்று செயல்படுகின்றார்களோ அந்த விதமான சுயாட்சியைத்தான் நாங்கள் கோருகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் அபிலாஷைகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com