Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் எரவான் எனப்படும் இந்துக் கோயில் வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை திடீரென நிகழ்த்தப் பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 9 வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 27 பேர் பலியாகி உள்ளதுடன் 120 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ சற்று முன்னர் மஞ்சல் நிற சட்டை அணிந்த ஓர் மர்ம இளைஞர் தனது முதுகில் மாட்டி இருந்த பொதி ஒன்றை குறித்த கோயிலுக்குள் வைத்து விட்டு செல்லும் காட்சி CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப் பட்ட இன்னொரு தாக்குதலில் வெடிக்கத் தக்க கிரைனேட் போன்ற பொருள் ஒன்று பாங்கொக் நதியில் வீசப் பட்டதாகவும் ஆனால் இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூட அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று மாலை எரவான் வழிபாட்டுத் தலத்தின் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சனோக்கா கடந்த சில தசாப்தங்களில் தாய்லாந்து மீது தொடுக்கப் பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென்றும் இதை நடத்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களது ஒரே நோக்கம் தாய்லாந்தின் பொருளாதாரத்தையும், சுற்றுலாத் துறையையும் சீர் குலைப்பது தான் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக தாய்லாந்து சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் அதன் நாணயமான தாய் பாஹ்ட் கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடத்தப் பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் தெற்கு தாய்லாந்திலுள்ள முஸ்லிம் பிரிவினை வாதிகளால் நிகத்தப் பட்டிருக்கலாம் எனவும் ஊகிக்கப் படுகின்றது. எது எப்படியிருப்பினும் தாய்லாந்து அரசின் புலனாய்வுப் பிரிவின் குறைபாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் ஓர் பௌத்த கலாச்சார நாடான தாய்லாந்தில் எவரும் இது போன்ற தாக்குதல்களை நடத்த முன்வர மாட்டார்கள் என அலட்சியத்துடன் இருந்து விட்டதாகவும் கூட குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

குறித்த எரவான் கோயிலானது இந்துக் கடவுளான பிரம்மாவின் கோயில் என்பதுடன் அங்கு தினசரி ஆயிரக் கணக்கான பௌத்தர்கள் விஜயம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தாய்லாந்து இந்துக் கோயில் வளாகத்தில் குண்டு வெடிப்பு!:27 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com