ஞாயிற்றுக் கிழமை இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் விபத்தில் சிக்கிய ட்ரிகனா விமானத்தில் பயணித்த 54 பேரும் கொல்லப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ள போதும் இதுவரை எந்த சடலங்களும் முழுமையாக மீட்கப் படவில்லை.
மோசமான காலநிலை காரணமாகக் கடும் சிரமத்துக்கு மத்தியில் மேற்கொள்ளப் பட்டு வந்த மீட்புப் பணியின் விளைவாக இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விமானத்தின் கருப்புப் பெட்டி சிக்கியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
குறித்த விமான விபத்துக்கான உண்மையான காரணம் என்னவென அதிகாரிகள் இன்னமும் அறிவிக்கவில்லை என்பதுடன் கருப்புப் பெட்டி கிடைத்திருப்பதால் தற்போது விசாரணைகள் துரிதமாக முடுக்கி விடப் பட்டுள்ளன. கண்டு பிடிக்கப் பட்ட ட்ரிகனா சேவையின் ATR 42-300 விமானத்தின் கருப்புப் பெட்டி நாளை ஒக்ஸிபில் நகருக்குக் கொண்டு செல்லப் படவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களில் 44 பேர் வளர்ந்தவர்கள் என்பதுடன் 5 சிறுவர்களும் 5 விமான சேவை ஊழியர்களும் அடங்குகின்றனர். இதைவிட கிராம அபிவிருத்தித் திட்டம் ஒன்றிட்காக இந்த விமானத்தில் $470 000 பெறுமதியான நாணய நோட்டுக்கள் கொண்டு செல்லப் பட்டதாகவும் கூடத் தெரிய வருகின்றது.
கடந்த வருடமும் இந்தோனேசியாவின் ஏர் ஏசியா விமான சேவையின் இரு விமானங்கள் விபத்தில் சிக்கியிருந்தன. அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாக அடிக்கடி இடம்பெற்று வரும் இது போன்ற விபத்துக்களால் ஐ.நா ஏவியேஷன் ஏஜன்ஸியால் இந்தோனேசிய விமான சேவை மிகவும் பாதுகாப்புக் குறைந்த சேவையாக 2014 இல் அறிவிக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி சிக்கியது!