Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது அங்கு எஞ்சியுள்ள 175 ஏக்கர் பரப்பளவிலுள்ள ஏரிகளில் இருந்து முழு நீரும் கடும் வெப்பத்தால் ஆவியாவதத் தடுக்க ஆவியாதவைத் ஒரு வித்தியசமான திட்டத்தை அமெரிக்கா அமுல் படுத்தியுள்ளது. அதாவது ஏரி நீர் ஆவியாகாமல் தடுக்க ஏரி முழுதும் கருப்புப் பந்துகளை மிதக்க விடும் நூதன திட்டத்தை லாஷ் ஏஞ்சல் மேயர் அறிவித்துள்ளார்.

ஏரியில் நிரப்பப் படும் கிட்டத்தட்ட 96 இலட்சம் கருப்புப் பிளாஸ்டிக் பந்துகள் சூரிய ஒளிக்கதிர்கள் தண்ணீருடன் நேரடியாக மோதுவதைத் தடுத்து அவற்றை உறிஞ்சி விடுவதால் ஏரிகளில் உள்ள நன்னீர் ஆவியாகும் வீதம் பெருமளவு குறைக்கப் படும் என்பதற்காகவே இத்திட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது. இதனால் ஒரு வருடத்துக்கு 300 கேலன் தண்ணீர் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கலிபோர்னியாவில் குடிநீர் வறட்சியைப் போக்க நூதன திட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com