Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சச்சினுக்கு அளித்த பாரத ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவித்து இருந்தது. இதுக்குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கலானது.அந்த மனுவில் வணிக விளம்பரத்தில் நடித்து பணம் ஈட்டும் சச்சினால் பாரத ரத்னா விருதின் கவுரவம் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, சச்சினிடம் இருக்கும் பாரத ரத்னா விருதை அவர் திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.மனுவை விசாரிக்க இருந்த நீதிபதிகள் மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தள்ளுபடி செய்துள்ளனர்.மனுதாரர் அடுத்து மத்திய ஆரசிடம் போகப்போவதாகவும், அங்கும் நீதி கிடைக்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சச்சினின் பாரத ரத்னா விருதுக் குறித்த மனு தள்ளுபடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com