உலகின் முண்ணனி இணையத் தொழிநுட்ப நிறுவனமான கூகுள் பொதுமக்கள் பாவனைக்கான திறந்த முற்றிலும் வேறுபட்ட வணிக ரீதியிலான தேவைகளுக்காக Alphabet Inc என்ற நிறுனத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த Alphabet ஆனது கூகுளின் இணைத் தாபகர்களான லாரி பேஜ், செர்கேய் ப்ரின் ஆகியோரால் நடத்தப் படவுள்ள போதும் இதன் புதிய CEO ஆக இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்பவரை கூகுள் நிறுவனம் நியமித்துள்ளது.
சென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது வீட்டில் தொலைக்காட்சி கூட இல்லாத சூழ்நிலையில் வளர்ந்து கரக்பூரின் ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பின் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பை முடித்த இவர் கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப் பட்டுள்ளமையானது தமிழர்களுக்கும் , இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. ஏற்கனவே உலகின் மிகப்பெரிய தகவல் தொழிநுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் இன் தலைமைப் பதவிக்கு (CEO)இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடெல்லா நியமிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை ஏற்கனவே இணையத் தேடல் செயலியான கூகுள் குரோம் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
மேலும் சுந்தர் பிச்சையுடன் சேர்த்து இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உலகளாவிய ரீதியில் முக்கிய கம்பனிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் குறித்த சுருக்கமான விபரம் கீழே தரப்படுகின்றது.
1.சத்யா நடெல்லா - மைக்ரோசாஃப்ட் CEO
2.இந்திரா நூயி - PepsiCo இன் chairperson மற்றும் CEO
3.அஜய்பால் சிங் பங்கா - MasterCard இன் அதிபர் மற்றும் CEO
4.லக்ஷ்மி மிட்டல் - ArcelorMittal இன் சேர்மேன் மற்றும் CEO
5.சந்தனு நாராயென் - Adobe Systems இன் CEO
6.ஹரிஸ் மன்வானி - Unilever இன் COO
7.ராக்கேஷ் கபூர் - Reckitt Benckiser இன் CEO
8.நிதின் பரன்ஜ்பே - Home Care Business Unilever இன் உலகளாவிய அதிபர்
9.அதுல் சிங் - ஆசியா கொக்கா கோலாவின் குழு அதிபர்

0 Responses to கூகுளின் CEO ஆக தமிழ் நாட்டின் சுந்தர் பிச்சை!: உலகளாவிய நிறுவனங்களில் பணி புரியும் 10 இந்தியர்கள்