யோகேந்திர யாதவ் தலைமையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
யோகேந்திர யாதவ் ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் இவர் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் கடன்சுமை தாங்காமல் தற்கொலை செய்யும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.அதோடு நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதைக் கைவிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் பேரணியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிடுவதாகத் திட்டம்.
இந்த நோக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக வந்தபோது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.மேலும், ஜந்தர் மந்தரில் இவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இவர்கள் மீது நேற்று நள்ளிரவு தடியடிப் பிரயோகம் நடத்தி, இவர்களில் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இருப்பினும், இன்று முதல் ஆகஸ்ட் 15ம் திகதி வரை ஜந்தர் மந்தரில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த உள்ளதாக யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று, ஆம் ஆத்மிக் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட மற்றும் ஒரு நபரான பிரஷாந்த் பூஷன் காவல்துறையினரை வலியுறுத்தி வருகிறார்.

0 Responses to யோகேந்திர யாதவ் தலைமையில் டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்