புழல் சிறையில் இருப்பவர்களில் இரண்டு மாணவர்கள் மட்டுமே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகள் 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த மாணவ மாணவிகளை அரசியல் தலைவர்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இந்த மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது.அதாவது புழல் சிறையில் உள்ள மாணவர்களில் இரு மாணவர்கள் மட்டுமே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றும், மீதம் உள்ளவர்களில் சிலர் பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர்களாகவும், மீதம் உள்ளவர்கள் புரட்சிகர மாணவர் முன்னேற்ற இயக்கமாக இருக்கக் கூடும் கல்லூரி நிர்வாகம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to புழல் சிறையில் இருப்பவர்களில் இரண்டு பேர் மட்டுமே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்