போராட்டத்தின் போது உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாள் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மதுவுக்கு எதிரானப் போராட்டத்தின்போது செல்போன் கோபுரத்தில் ஏறி உயிரைவிட்டார் சசிபெருமாள். இவரது மறைவுக்கு நீதியாக தமிழக அரசு மதுவிலக்கை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று சசிபெருமாள் குடும்பத்தினர் சசிபெருமாள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 6 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் சசிபெருமாள் இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, அவரது குடும்பத்துக்கு நிதியுதவியும் அளித்து வந்தனர்.
இன்று சென்னை உயர் நீதிமன்றம் சசி பெருமாள் குடும்பத்துக்கு சசி பெருமாள் உடலை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதோடு அப்படி பெற்றுக்கொள்ள மறுத்தால் மாவட்ட ஆட்சியர் அடுத்த நடவடிக்கைக் குறித்து முடிவெடுப்பார் என்றும் தெரிவித்து இருந்தது.இன்று வைகோ, திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் சசிபெருமாள் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோயில் மருத்துவமனியில் உள்ள சசிபெருமாள் உடலைப் பெற்றுக்கொள்ளும் அவர்கள் நாளை சேலம் மேட்டுக்காட்டில் சசிபெருமாள் உடலை அடக்கம் செய்ய உள்ளனர் என்று தெரிய வருகிறது.

0 Responses to சசிபெருமாள் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்