Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை தியாகராய நகரில் அதிமுகவினர் காங்கிரஸ் தமிழகத் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 14ம் திகதி சென்னையில் மதுவுக்கு எதிரானப் போராட்டம் நடைப்பெற்றது.அப்போது கூட்டத்தில் அங்கங்கு கலந்துக்கொண்டு உரையாற்றிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நரேந்திர மோடி ஜெயலலிதா இல்லத்தில் சந்தித்ததை கொச்சைப்படுத்திப் பேசினார் என்று கூறப்படுகிறது. இதற்கு அதிமுக தரப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது.சென்னை தியாகராய நகரில் பெரும் ஆர்ப்பாட்டம் அதிமுக எம் எல் ஏ கலைராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இவ்விடத்தில் இளங்கோவன் உருவ பொம்மையை எரித்துப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது.50க்கும்மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

0 Responses to சென்னை தியாகராய நகரில் அதிமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com