Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பிரபலமான ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் உடலம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) கல்கிசை நீதவான் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது.

தெகிவளை பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த வசீம் தாஜூதீனின் உடலம் மீள் பிரேதப் பரிசோதனைகளுக்காக தோண்டியெடுக்கப்பட வேண்டும் என்று இரகசியப் பொலிஸார் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவே, இன்று உடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

வசீம் தாஜூதீனின் உடலமானது கடந்த 2012 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் சாலிகா விளையாட்டு மைதானத்தை அண்மித்த பிரதேசத்தில் எரிந்த நிலையில் இருந்த கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. அவர் சித்திரவதைக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

0 Responses to ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் உடலம் தோண்டியெடுக்கப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com