Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்குமாறு சர்வதேசக் கிரிக்கட்டிலிருந்து இன்று திங்கட்கிழமை ஓய்வுபெற்றுச் செல்லும் குமார் சங்ககாரவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியுடன் ஆலோசித்த பின்னர் தனது முடிவினை அறிவிப்பதாக குமார் சங்ககார அறிவித்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி வீரருமான குமார் சங்ககார கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளோடு ஒருநாள் கிரிக்கட்டிலிருந்து விடைபெற்றார்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து இன்று நிறைவு பெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியோடு ஓய்வு பெற்றுக் கொண்டார்.

குமார் சங்ககாரவுக்கான பிரியாவிடை நிகழ்வு கொழும்பு சரவணமுத்து கிரிக்கட் மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்ககாரவை பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார்.

0 Responses to பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவியை ஏற்க குமார் சங்ககாரவுக்கு மைத்திரி அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com