சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் இன்று பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக அரசு தரப்பிலும், திமுக தரப்பிலும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், ஜெயலலிதா தரப்பில் இதற்கான பதில் மனு அளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்திருந்தனர்.
எனவே, ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வர் தரப்பினர் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் எந்தவித சட்ட விதிமுறை மீறல்களும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே கணக்கு வழக்குகள் கான்பிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதில் மனு