Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தீர்மானங்களும் நாட்டினதும், நாட்டு மக்களினதும் வெற்றியை இலக்காகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவானோருடன் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடத்திய விசேட சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள தேவைகளை இனங்கண்டு நாட்டிற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் மேற்கொள்ளக்கூடிய பொறுப்புக்களை இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இணக்கப்பாட்டுடன் செயற்பட்டால் மாத்திரமே நாட்டையும் மக்களையும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சு.க.வின் தீர்மானங்கள் நாட்டின் வெற்றியை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com