தமிழகம் எங்கும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு முறையானப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுவாக எடுத்து விசாரிக்கும்படி ஒரு பொது நல மனுத் தாக்கலானது. அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மீது, ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றும், இதனால் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு சேதமும், இ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. அதோடு, காங்கிரஸ் அலுவலகங்களுக்கும், இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சூரியப் பிரகாஷ் என்பவர் தொடுத்து இருந்ததாகவும் தெரிய வருகிறது.
மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் வருகிற திங்கட்கிழமை மனுதாரரின் மனுவுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தனர்.அதுவரை தமிழகம் எங்கும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு முறையானப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.கடந்த 3 திங்களுக்கும் மேலாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் ஜெயலலிதா, நரேந்திர மோடி சந்திப்புக் குறித்து கொச்சைப்படுத்திப் பேசினார் என்று அதிமுக, பாஜக கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து இளங்கோவன் உருவ பொம்மையை எரித்து வருவதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழகம் எங்கும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு: நீதிமன்றம்